சூட்சமத்தையும், சூத்திரத்தையும் தன் கையில் வைத்துக்கொண்டு சதிராடும் நிழல் உலகின் அசைக்க முடியாத கிரகம் ராகுவாகும்.

Advertisment

இது ஒரு பகுப் பொருளில்லை என்றாலும் பகுப் பொருட்களால் ஆக்கப்பட்ட மற்ற கிரகங்களின் தன்மையை தலைகீழாக மாற்றவல்ல சக்தி ராகுவிற்கு மட்டுமே உள்ளது. 

Advertisment

தனக்கென ராசி கட்டத்தில் ஒரு வீடு இல்லையென்ற பொழுதிலும் 3, 7, 11 ஆகிய இடங்களில் தனது நட்சத்திரங்களை நடு நட்சத்திரமாக அமைத்து பலத்தை பெறும் அதிசூட்சம கிரகம் இந்த ராகு ஆகும். 

3, 7, 11 காம திரிகோணங்களாக அமைவதால்தான், காமத்திற்கும் ராகுவிற்கும் ஒரு இணைப்பை ஜோதிடவியல் அருளியுள்ளது. 

Advertisment

திருமணப் பொருத்தத்தில் செவ்வாய்க்கு அடுத்தபடியாக தோஷத்தை அளிப்பது ராகு- கேதுக்கள்தான். 1, 2, 7, 8 ஆகிய இடங்களில் அமையும் ராகு- கேதுக்கள் சர்ப்ப தோஷத்தை அளிக்கின்றனர். 

மேலும் ராகு- கேதுக்கு இடையில் சிக்கும் கிரகங்கள் கால சர்ப்ப தோஷத்தையும் வழங்குகின்றன. 

உண்மையில் ராகு தோஷம் தோஷமா? இல்லை உடல் வ-மை மற்றும் உட-ல் அமையப் பெற்றுள்ள வேகத்தின் தன்மையை குறிப்பது இந்த ராகுவாகும்.

அதனால்தான் 4-ஆமிடம் என்கின்ற கற்பு  ஸ்தானத்தில் அமையப் பெற்ற ராகு உள்ள ஜாதகத்திற்கு 3 மற்றும் 12-ஆம் பாவகம் சிறப்பாக அமைந்த ஜாதகத்தை இணைக்கிறோம். இந்த இணைவானது இரண்டு ஜாதகங்களின் உடல் தேவைகளையும் பூர்த்தியாக்கும் தன்மையை வழங்கும். 

இதன் அடிப்படையில்தான் ராகு- கேது உள்ள ஜாதகங்களுக்கு ராகு- கேது உள்ள ஜாதகங்களை அமைக்க வேண்டும் என்கின்ற ஒரு தன்மையை ஜோதிடவியல் பறைசாற்றுகின்றது. 

ராகு அமரும் இடம் பலம் பெறும். 2-ல் அமைந்த ராகு வாக்கு வன்மை, 3-ல் அமைந்த ராகு அதீத முயற்சி, 4-ல் அமைந்த ராகு இனக் கவர்ச்சி மற்றும் அதீத இச்சை, 5-ல் அமைந்த ராகு பூர்வீகத்தில் இதுவரை செய்யப்படாத ஒரு செயலை செய்வது, 6-ல் அமர்ந்த ராகு சத்ரு ஜெயம், 7-ல் அமர்ந்த ராகு சமூகரீதியாக அணுகும் சூழலை இலகுவாக ஆக்கி தருதல், 8-ல் அமர்ந்த ராகு பருப் பொருளையும், ஆழ்ந்த இரகசியங்களையும், கண்டறியும் தன்மை, 9-ல் அமர்ந்த ராகு பாக்கியம் சார்ந்த விஷயங்களில் ஒரு அதிகப்படியான ஆளுமையை எடுப்பது மற்றும் தந்தைவழியில் இருதார யோகத்தை சுட்டிக்காட்டுவது, 10-ல் அமர்ந்த ராகு தொழில் விஷயத்தில் கொடிகட்டி பறக்கும் தன்மையை வழங்குவது, 11-ல் அமையப்பெற்ற ராகு அதீத சொத்து சுகம் மற்றும் தன் இச்சையை நிறைவேற்றிக் கொள்ளும் பலம் நிறைந்தது. 

12-ல் அமையப்பெற்றது வெளிநாடு மற்றும் மறை பொருளை தேடும் தன்மையை வழங்குவது, லக்ன ராகு தன்னை உயர்வாக எண்ணி தான் மட்டுமே இந்த உலகத்தில் அரிய பொருள் என்கின்ற எண்ணத்தை வழங்கக்கூடிய தன்மையை அளிப்பது. ஆக ராகு எங்கு அமர்ந்தாலும் அதை சார்ந்த பலத்தை நிச்சயமாக அளித்துவிடுவார் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. 

ஆக, ராகு சக்தியின் அதீத வெளிப்பாடு. அந்த சக்தியை கையாள தெரிந்த ஒரு ஜாதகத்துடன் இணைக்கவே தோஷம் உள்ளவர்களுக்கு தோஷமுள்ளவர்களை இணைக்கின் றோம். 

இந்த போக காரகன் ராகுவுடன் இணையும் கிரகங்கள் பெரும்பாலும் இடர்பாட்டை அணுகுகின்றது. 

சூரியன்+ ராகு 

பித்ரு தோஷத்தையும், கிரகண தோஷத் தையும் அளிக்கின்றது மேலும் தந்தைவழியில் மறுக்கப்படாத ஒரு காயத்தை விதைத்து செல்கின்றது. 

சந்திரன்+ ராகு 

தாயாதிவழி சொந்தங்களிலும், தாயின் உடல்நலனிலும், சிந்தனை திறனிலும், பெரும் இடர்பாட்டை அளித்து தாய்வழி தோஷத்தை அளிக்கின்றது.

செவ்வாய்+ ராகு 

தேவைக்கு  அதிகப்படியான ஆசை மற்றும் அடம் பிடிக்கும் தன்மையும், தீவிரமான சிந்தனையும், அதீத இச்சையும் வழங்கவல்ல கிரக இணைவாகும். 

புதன்+ ராகு 

எண்ணத்தில் பிரம்மாண்டத்தை அளித்து, சிறு வஞ்சகத்தை நிகழ்த்தக்கூடிய தன்மையை வழங்குகின்றது. 

குரு+ ராகு 

குரு சண்டாள யோகத்தை வழங்குகின்றது பெயரளவில் தான் இது யோகம் மற்றபடி சிந்திக்கும் திறனில் மாபெரும் தீவிரவாதத்தனத்தை உட்பகுத்தும் தன்மை அடங்கியுள்ளது. 

சுக்கிரன்+ ராகு 

உடல் தேவைகளின் தன்மையை அதிகமாக தருவதோடு தாம்பத்தியத்தில் சில பிரச்சினைகளையும் கணவன்- மனைவி வழியில் சில இடர்பாடுகளையும் அளிக்க வல்லது. 

சனி+ ராகு 

இந்த இணைவானது மற்ற இணைவுகளை விடவும் சற்று சிரமத்திற்கு உட்படுத்தும் இருந்தபொழுதிலும் தொழில்வகையில் பெரும் லாபத்தை அடையக்கூடிய ஒரு கிரக இணைவாகும். 

ராகு தசை மொத்தமாக 18 வருடங்களை தன்வசம் கொண்டுள்ளது. 

ராகு தசையில் ராகு புக்தி

2 வருடம் 8 மாதம் 12 நாட்கள் கொண்ட இந்த காலகட்டம் இந்த 18 வருடங்கள் எவ்வாறு செல்லும் என்பதன் வரைபடம் தான். 

இந்த காலகட்டத்தில் நன்மையின் சூழல் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக ராகு தசை ஒரு பெரும் சிறப்பை கொடுக்கும் என்பதனில் மாற்றமில்லை. பெரும்பாலும் ராகுவின் தசையானது மனித இனத்தின் வஞ்சகங்களை கண்டறியும் தன்மையை மக்களுக்கு வழங்கும். 

இதே ராகு தசையில் கொடிகட்டி பறந்த நிறைய தொழிலதிபர்களின் ஜாதகங்களைப் பார்க்கும்பொழுது இவர்களுக்கு ராகுவிற்கு திரிகோணத்தில் சுப கிரகங்கள் இருந்து தசை நடத்துவதை காண முடிகின்றது. 

இந்த காலகட்டம் ராகுவின் சுபமான தன்மையி-ருந்து நிகழ்த்தும் தசை எல்லா வளங்களையும், நலங்களையும் அருள கடமைப்பட்டுள்ளது. குறிப்பாக முதலீடுகளின்மூலம் பெரும் பணத்தையும், சமுதாயத்தில் உயர்ந்த மரியாதையும் அனுபவிக்கும் தன்மையை இந்த தசா புக்தி வழங்கும். 

மாறாக ராகுவின் நிலை சிறப்பாக இல்லாதபட்சத்தில் பயணிக்கும் ஒவ்வொரு நாளிலும் முள் கிரீடத்துடன் பயணிக்கும் தன்மையை வழங்கும்.

ராகு தசையில் குரு புக்தி 2 வருடம், 4 மாதம், 24 நாட்கள் கொண்ட இந்த காலகட்டமானது தனக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என்கின்ற எண்ணத்தோடு பயணிக்கும் தன்மையை ஒரு ஜாதகருக்கு வழங்கிவிடும். குருவோ அல்லது ராகுவோ 12-ஆம் மற்றும் ஒன்பதாம் இடத்தோடு தொடர்பு பெறும்பொழுது இந்த கால கட்டம் நிச்சயமாக வெளிநாட்டு யோகத்தை அருளும். அதேபோன்று குழந்தைகளின் வழியில் ஒரு சிறப்பான தன்மையை அனுபவிக்கும் சூழல் ஏற்படும் ராகு தசையில் சனி புக்தி 2 வருடம், 10 மாதம், 6 நாட்கள் கொண்ட இந்த கால கட்டமானது தொழில் நிலையில் நல்ல வளர்ச்சியை அளிக்கும். அதேபோன்று தொழில் மற்றும் பணியிடங்களில் தங்களுக்கு மேலதிகாரிகளோ அல்லது தங்களுக்கு கீழ் நிலையில் பணிபுரிபவர்களின் உறவுகளில் சில மாறாட்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ராகுவோ அல்லது சனியோ ஒன்பதாம் பாவகத்தோடு தொடர்பு பெறும்பொழுது தந்தைவழி சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி சொத்துகள் உங்கள் வசம் சேர்க்கப்படும்.

ராகு தசையில் புதன் புக்தி 2 வருடம், 6 மாதம், 18 நாட்கள் கொண்ட இந்த காலகட்டம் மனதில் தனக்கு யாரோ செய்வினை செய்துவிட்டதாகவும், தங்களின் சூழ்நிலை மாறாட்டத்துக்கு உட்பட்டதாக மாறியதாக வும் எண்ணம் மேலோங்கும்.

ராகு தசா புக்தியின் பலன்கள் வரும் இதழிலும் தொடர்கிறது